துாத்துக்குடி துறைமுகத்தில், இரண்டே கால் ரூபாய் சம்பளத்திற்கு தினக்கூலியாகச் சேர்ந்து, நாற்பதாண்டு கால பணியில், பல்வேறு படிநிலைகளை அடைந்து ஓய்வு பெற்றவர் செல்வத்துரை.
அந்த அனுபவத்தின் மூலம், துறைமுக உருவாக்கப் பணிகள் குறித்த தகவல்களை விரிவாக திரட்டித் தந்துள்ளார். அதோடு, துாத்துக்குடி மண்ணின் தொன்மை துவங்கி, தொழில் வளம் வரை முழுமையாய் தொகுத்துள்ளார்.
முத்துக் குளிக்கும் முறை, தீவுகளுக்கான பெயர்க் காரணம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய செயற்கை துறைமுக கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அவற்றை தருவித்த வழி, முன்னின்று செயல்படுத்திய பொறியாளர்கள், இத்துறைமுகத்தின் வழியே மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து என, ஏராளமான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
– சையது