விடுதலைப் போராட்டத்தின் தொடக்க கால புரட்சித்தலைவர்களான, மருதிருவர் வரலாறு குறுங்காவியமாகப் புனையப்பட்டுள்ளது. தமிழரின் தேச பக்தி வரலாற்றைப் பதிவு செய்யும் இலக்கிய ஆவணம்.சிவகங்கை நீங்கு படலம், மீட்புப் படலம், எழுச்சிப் படலம், வீழ்ச்சிப் படலம் என, காவியம் விரிந்து செல்கிறது. வஞ்சகத்தால் வீழ்ந்துவிட்ட மருதிருவர் காவியம் என்று, பாயிரத்தில் பதித்துள்ளார். தமிழனை வீரத்தால் வெல்ல முடியாததால், வஞ்சத்தால் வென்றதையே வரலாறு சொல்கிறது.
நாட்டுக்காக நல்லுயிர் தர, துாக்குக் கயிறுகளின் முன் நிற்கும் மருதிருவரையும் கண்டு, வானம், கானகம், மானம், ஞானம் எல்லாம் அழுததாகப்பாடுகிறார். வெள்ளை மருது பாய்ந்து வந்த புலியை, வாலைப் பிடித்துத்துாக்கி அடித்துக் கொன்ற இடத்தை, புலியடித் தம்மம் என்று காட்டுகிறது. விடுதலைப் போராட்டத் தியாக சீலர்களின் காவியம்!
– முனைவர் மா.கி.ரமணன்