ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி போன்ற பிரபந்தங்கள் இயற்றியுள்ளார். அதில், திருமாலை பிரபந்தத்தில், 45 பாசுரங்களுக்கு விளக்கவுரை தரப்பட்டுள்ளது.
பாசுரங்களுக்கு தனித்தனியாக தலைப்பிட்டு விளக்குவது, படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஐம்புலன்களை அடக்குவது குறித்து விளக்குவதும், திருமகள், நிலமகள், ஆய்மகள் ஆகியோர் ஒருவரே என்று விளக்கப்பட்டுள்ளதும் சிறப்பானது.
நான்காம் பாசுரம், அவ்வை பாடலின் துணை கொண்டு விளக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் பாசுரத்தின் உரையில், திருக்குறள் பாடல் கூறி விளக்குவதும் சிறப்பாக உள்ளது. 14ம் பாசுர உரையில், திரைப்படப் பாடல் வரிகளைக் கூறி விளக்கப்பட்டுள்ளது. இவை, ஆசிரியரின் பரந்துபட்ட அறிவாற்றலைத் தெளிவாக்குகின்றன.
மற்ற ஆழ்வார் பாசுரங்களைத் தக்க இடத்தில் கையாள்வதும், பகவத் கீதை, ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகர் நுால்களின் சுலோகங்களைக் கூறுவதும், சிறப்பாக உள்ளது. ஆன்மிக அன்பர்கள் படித்துப் பயன் பெறத் தக்க நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து