மானுட ஏற்றத்தாழ்வுகளையும், சீர்கேடுகளையும் அகற்றி சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்டும் மகத்தான பணியில் ஈடுபட்டவர்கள் நபிகள் எனும் இறைத் துாதர்கள்.
மனித உரிமையை போதித்து, மக்கள் பணியாற்றிச் சமூக நீதியை நிலைநாட்ட அரும்பாடுபட்டார்கள். இறைத் துாதர்களிடம் சுய நலம், ஒருபக்கச் சார்பு, நியாயம் தவறல், அநீதி செய்தல் போன்ற தீய பண்புகள் சிறிதும் இருக்காது.
திருக்குர்ஆனில், மூஸா நபியின் வரலாறு குறித்து, பல இடங்களில் பேசப்படுகிறது. முற்காலத்தில், குழந்தையைதுாங்க வைக்கப் பெற்றோர் கதை சொல்வர். அவை, நல்ல அறிவுரைகளைக் கொண்டதாக இருக்கும்.
அந்த வகையில், படிப்பினை தரும் விதத்தில் அமைந்த நபிமார்களின் வரலாற்றை எடுத்துரைப்பதன் வாயிலாகப் புத்துணர்ச்சி, உத்வேகம், நல்லறிவு, நன்னம்பிக்கை, நற்குணம் உருவாகும். சமூகத்திற்கு நற்கருத்துக்களை வழங்கும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்