உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க, 28 தலைப்புகளில் பாடம் நடத்தும் நுால். ஒவ்வொரு தலைப்பும், நடப்பு சம்பவங்களை நினைவூட்டுகிறது. பார்வைக்கு உலகம் வெவ்வேறாக தெரிந்தாலும், மகிழ்ச்சி ஒன்று தான், வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது. அதை எப்படி உணர வேண்டும்; காயப்படும் மனிதர்களின் கவலையை மறக்க வைப்பதன் அவசியத்தை ஆழமாக விவரிக்கிறது.
முதுமையின் கொடுமையை களைவது; ஏழைகளின் சிரிப்பை ஏன் உணர வேண்டும்; இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் ஆனந்தம்; ஏற்றுக்கொள்ளும் மனதை தயார் செய்வது எப்படி என, வாழ்வது ஒரு முறை தான், அதை நேர்மை, மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்ற தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
பிரச்னைகளை மகிழ்ச்சியுடன் கையாண்டால் தான், வாழ்க்கையின் வளர்ச்சியை எட்டி பிடிக்க முடியும் என சொல்கிறது. செலவே இல்லாமல், புன்னகையில் பிறரை மகிழ்ச்சி அடைய செய்வது, அதில் கிடைக்கும் ஆனந்தத்தை உணர்ச்சியுடன் கொண்டு செல்கிறது. அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்