தஞ்சை சரஸ்வதி மகால் நுாலகத்தில் தமிழ் பண்டிதாராக பணியாற்றும் முனைவர் மணி.மாறன் ஆய்வு செயல்பாடுகள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். ஆய்வு உலகில் மணிமாறன் என முதல் தலைப்பாக துவங்குகிறது. அதில், அவரது வாழ்க்கை சித்திரம், குடும்ப பின்னணி, கல்வி, ஆய்வு துறையில் ஏற்பட்ட ஆர்வம், எது தொடர்பான செயல்பாடுகள் பற்றிய விபரங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. அவரது படைப்புகள் பற்றிய விபரமும் தரப்பட்டுள்ளது.
அவரது ஆழமான ஆய்வுகள் பற்றிய விபரமும், அது தொடர்பான படைப்புகள் பற்றியும் விரிவான தகவல்கள் உள்ளன. ஆய்வின் போது ஏற்பட்ட அறிஞர்கள் தொடர்பு, தமிழ் சமூகத்துக்கு அளித்துள்ள கொடைகள் என அரும் பெரும் பணிகளை எளிய நடையில் விவரித்துள்ளது. ஓர் ஆய்வறிஞரின் வாழ்க்கை பாதை சுவடுகளை வெளிப்படுத்தும் நுால்.
– மலர்