இந்தியா சுதந்திரம் பெற்ற பின், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட வரலாற்றுத் தகவலை முறையாக தரும் நுால். ஒன்பது தலைப்புகளில் அமைந்துள்ளது. முதல் இயல், மொழிவாரி பிரிப்பு என்ற தலைப்பில் தகவல்களை கொண்டுள்ளது. புத்தகத்தின் சுருக்க அறிக்கை போல் அது அமைந்துள்ளது.
அடுத்து, தமிழ்நாடு என மாநிலப் பெயரைக் கோரி போராடிய சங்கரலிங்கரனார் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை குறிப்பு, நாட்டுப்பற்று, போராட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த தலைப்பு அண்ணாவும் தமிழ்நாடும் என்ற தலைப்பில் உள்ளது. அண்ணாதுரையின் நாடாளுமன்ற உரை மற்றும் நடவடிக்கையுடன் துவங்குகிறது. அவரது செயல்பாடுகள் பற்றி எழுதப்பட்டுள்ளது.
அடுத்து, தமிழ் தேச தந்தை, மங்கலக்கிழார், மார்ஷல் நேசமணி, குமரி மாவட்டம், மாகாண பிரிவினை என்ற தலைப்பில் கட்டுரைகள் உள்ளன. மொழிவாரி மாநில பிரிப்பு பற்றிய தகவலை சுருக்கமாக தரும் நுால்.
– ஒளி