தொல்லியல் சிறப்பு வாய்ந்த திருவக்கரை, கீழ்வாலை, உடையார்நத்தம், பெருமுக்கல், தொண்டூர், நெகனுார்பட்டி, திருநாதர் குன்று, மண்டகப்பட்டு, பனைமலை, திருவிழிச்சில் ஆகிய தொல்லியல் சின்னங்களின் வரலாற்றை சொல்லும் நுால். உடையார் நத்தம் அருகே கீழ்வாலைப்பாறை ஓவியங்கள், தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள பாறை ஓவியத் தொகுப்புகள், சிந்துவெளி குறியீடுகளை ஒத்துள்ளன.
மகேந்திரவர்ம பல்லவனின் மண்டகப்பட்டு குடைவரை கோவில், ராஜசிம்மனின் பனைமலை கோவில் ஓவியம், கல்வெட்டு மற்றும் கொற்றவை சிற்பம் குறித்த கட்டுரைகளும் உள்ளன. இறுதியில் மாமல்லபுரம் சாளுவன்குப்பம், சங்க கால முருகன் கோவில் பற்றிய கட்டுரை, தொல்லியல் அகழ்வாய்வு தடயம், இலக்கியம், கல்வெட்டு சான்றுகளு டன் எழுதப்பட்டுள்ளது. உரிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
– ராமலிங்கம்