பல ஆண்டுகளுக்கு பின் நடக்க இருக்கும் சயின்டிபிக் கதையாக தோன்றுகிறது. அதற்கு இந்த வரிகள் உதாரணம்... உடனடி இரவுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் மயக்கப் புகை அறையில் திடீரென இரவு 10:00 மணி அளவில் பரவ விடப்பட்டது. ஒன்பது மணி நேரம் கணிசமான அளவில் அவர்கள் துாங்குவதற்கு நேரம் தரப்பட்டது.
இது இப்பொழுது நடப்பது இல்லை அல்லவா. அதனால் தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கும் விஞ்ஞானப் புதுமை எனச் சொல்லப்படுகிறது. சில விளையாட்டுகளை கதை நகர்த்துகிறது. இதெல்லாம் பழங்கால நிகழ்கால விளையாட்டுகள். ஆனால் வித்தியாசமான முறையில் சொல்லப்படுகிறது.
பரமபதம், சதுரங்கம் எல்லாம் வரும் காலத்தில் வேறு வடிவம் எடுக்குமாம். கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கிறது.
– சீத்தலைச் சாத்தன்