வாஸ்து, கையெழுத்து, எண் சக்தி ஆய்வியல் வழியாக, வாழ்வில் நல்ல பலன்கள் பெற முடியும் என்பதை அறிந்து கொள்ள உதவும் நுால். வாழ்க்கை அனுபவங்களில் இருந்து படைத்துள்ளார்.
வாஸ்து பார்த்து மனை தேர்வு செய்வது, வீடு கட்டுவது, படுக்கை, சமையல், வரவேற்பு அறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும், மாற்றி அமைத்தால் ஏற்படும் எதிர்வினைகள் குறித்து விளக்குகிறார்.
கையெழுத்தை வைத்து, மனிதனின் தலையெழுத்தை கணிக்க முடியும் என்கிறார். இந்த பகுப்பாய்வு, ஐரோப்பாவில் இருந்து தோன்றி வந்த கிராபாலஜி எனவும், இதை வைத்து, குணநலன்கள், எதிர்மறை சிந்தனை, தொழில் முன்னேற்றம், வாழ்க்கை துணை அமைவதை கண்டறியலாம் என்றும் கூறுகிறார்.
பெயரை வைத்து, எப்படி எண் சக்தி ஆய்வியல் வழியாக, சாதக, பாதக குணநலன்களை கணிப்பது, இதை கொண்டு, தொழில் பொருத்தம், வாகன பதிவு எண் தேர்வு, அதிர்ஷ்ட எண்களை தேர்வு செய்யலாம் என்கிறார்.
ஒருவரின் நல்ல செயல்களே, அவருக்கு நல்ல பலன்களை தரும்: இதுவே, இயற்கையின் நீதி என்கிறது நுால்.
– டி.எஸ்.ராயன்