மன்னார் வளைகுடாவின் சுற்றுச்சூழல் மேன்மையை எடுத்துரைக்கும் நுால். சேது சமுத்திரம் திட்டத்தை அமல்படுத்தினால், மன்னார் வளைகுடாவின் இயற்கை சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்த விபரங்களை குறிப்பிட்டு எச்சரிக்கிறது.
நுாலின் முதல் பகுதி மன்னார் வளைகுடா பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளது. அடுத்து இந்த வளைகுடா பகுதியில் கலக்கும் ஆறுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. தொடர்ந்து, சேது சமுத்திர திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி தரப்பட்டுள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள், மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உயிரினச் சூழல் மீதுள்ள ஆர்வத்தில் எழுதப்பட்டுள்ள நுால்.
– ஒளி