தமிழக இடைக்கால வரலாற்றில், கரிசல் காட்டில் கோலோய்ச்சிய இளையரசனேந்தல், குருவிகுளம் ஜமீன்கள் பற்றி, விரிவாக விளக்கும் நுால். தகவல்களின் களஞ்சியமாக உள்ளது. ஆதாரமாக உரிய படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் ஒரு பகுதியின் ஒரு காலகட்டத்தின் வரலாற்றை கூறுகிறது. ஜமீன்தார்களின் பூர்வீகம், வாரிசு பட்டியல், சமூகம் அமைப்பு, நிர்வாக நடைமுறை போன்றவை பற்றிய தகவல்கள் முயன்று சேகரித்து எழுதப்பட்டுள்ளது.
இளையரசனேந்தல் ஜமீன் பற்றி, 38 கட்டுரைகளும், குருவிகுளம் ஜமீன் பற்றி, 16 கட்டுரைகளும் அடங்கியுள்ளன. ஜமீன்களின் இருப்பிடம், ஜமீன்களின் வரவு, செலவு செயல்பாடு, பிரிட்டீஷ் ஆட்சியுடன் ஏற்பட்ட தொடர்பு, கொண்டிருந்த உறவு, ஜமீன்களின் சமூக பொருளாதார நிலை, பராமரிப்பில் இருந்த கோவில்கள், அரண்மனை போன்ற தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை தருகிறது.
ஆய்வேடுகள், பேட்டிகள், இலக்கிய ஆதாரங்களை திரட்டி எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் குறிப்பிட்ட காலக்கட்டத்தை படம் பிடிக்கும் வரலாற்று நுால்.
– ராம்