சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை உள்ளிட்ட பணிகளில் சாதிக்க தேவையான தகுதிகள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.
இரும்புத்திரை என்ற அடைமொழியுடன் இருந்த திரைத்துறை முற்றாக மாறிவிட்டது. கோடம்பாக்கம் சாலைகளில் நடந்து தேய்த்தால் தான், திரைக்கலைஞனாக உருவெடுக்க முடியும் என்ற நிலை தற்போது இல்லை. தகுதியை வளர்த்து குறுகிய காலத்திலேயே உரிய வாய்ப்பை பெற முடியும். இன்று அப்படித்தான் பலர் முத்திரை பதித்து வருகின்றனர்.
கண்ணை மூடி குதிப்பதற்கு முன், அதன் ஆழ, அகலம் குறித்து அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.
– சையத் அலி