ஆதிசங்கராச்சாரியார் திருவாய் மலர்ந்தருளிய, ‘சங்கராச்சாரியார் சோதிடம்’ எனப் போற்றப்படும் நுால். யாப்பிலக்கண வகையில் ஆசிரிய விருத்தப் பாக்களால் அமைந்துள்ளது.
முன்னோருக்கும், நமக்கும் உள்ள உறவும் தொடர்பும் நீடிக்கின்றன. அந்தத் தொடர்பை எந்த அளவுக்கு வைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு துன்பங்கள் குறைந்து நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கு செய்யும் கடமைகளை அசுபமானவை என நினைப்பது முற்றிலும் தவறானது.
முன்னோரின் வருடாந்திர திதி அன்று பூஜிக்கும் முறையை தர்ப்பணம், சிரார்த்தம் என்று தொன்மை நுால்கள் கூறுகின்றன. அரிய சக்தி வாய்ந்த பித்ரு பூஜையை செய்து பயன் பெறுவது அவசியம் என எடுத்துக் காட்டுகிறது.
திருமணம், வளைகாப்பு, மண உறுதி போன்ற மங்கல நிகழ்வுகளில் முன்னோரை வரவேற்று, வணங்கி வாழ்த்து பெறுவது பற்றி விவரிக்கிறது. சோதிடர்களுக்கு மிகவும் பயனுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்