மானுட பிறப்பை பயனுள்ளதாக்கி, நிறைவுடன் வாழ்ந்து, இனி பிறவாமை என்ற ஞான நிலையை அடைய சைவத்தில் வழிகாட்டும் நுால். பதினாறு பேறுகளையும் பெற்று சிறப்புடன் திகழவும், திருப்பதிகங்களின் துணை கொண்டு நலம் பெற வேண்டும் என்ற நோக்கில், சைவ சமய குரவர்கள் நால்வரின் திருப்பதிகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பேற்றை அடைவதற்கு துதித்து பாட வேண்டிய திருப்பதிகங்கள் தனித்தனியே பகுத்து தரப்பட்டுள்ளன. அன்றாடம் இல்லங்களில் வழிபாடு செய்யும் முறைகளும், திருக்கோவிலில் வழிபடும் முறைகளும் காட்டப்பட்டு உள்ளன.
சிவராத்திரி அன்று திருக்கோவில்களில் வழிபடும் முறை, ஓத வேண்டிய ஐந்தெழுத்துப் பதிகங்கள், திருக்கோவில் உள்ளே கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை, தவிர்க்க வேண்டிய செயல்பாடு என அனைத்தும் நிரல்படுத்தப்பட்டுள்ளன. சைவ அன்பர்கள் படித்து பின்பற்ற வேண்டிய நுால்.
– புலவர் சு.மதியழகன்