கட்டபொம்மனைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் உயர்த்தியும், தாழ்த்தியும் எழுதியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். கட்டபொம்மன் பரம்பரை, பாஞ்சாலங்குறிச்சி தோற்றம், ஆட்சிக்காலம், பாளையக்காரர்களுக்குள் இருந்த நட்பு, பகைமை, ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரான போர், கட்டபொம்மனின் இறுதிக்காலம் பற்றி எல்லாம் தகவல்களை தந்து உள்ளது.
கட்டபொம்மனைப் பற்றி எல்லை போராட்ட வீரர் ம.பொ.சி., எழுத்தாளர் தமிழ்வாணன் கருத்துக்கள் மறுத்துரைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் செகவீரபாண்டியனார் கருத்தும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாறுபட்ட கருத்துக்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கட்டபொம்மன் மீது பாளையக்காரர்கள் வெறுப்பு கொண்டிருந்ததை இறுதிப் பகுதி தெரிவிக்கிறது. ஆங்கிலேயரை ஒரு முறை தான் அவன் எதிர்த்தான்; மற்றபடி அவர்களுடன் உடன்பட்டே இருந்ததை கோடிட்டி காட்டிச் செல்கிறது.
உண்மையில் ஆங்கிலேய எதிர்ப்புணர்வு அவன் மனதில் இல்லை. கோட்டையை ஆங்கிலேயப் படைகள் சுற்றி வளைத்தபோது மட்டுமே எதிர்த்தான் என்ற கருத்து பதிவாகியுள்ளது. இரு வேறு கருத்துக்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால்.
– ராம.குருநாதன்