பாரதியின் புரட்சிக் கருத்துக்கள், மக்கள் மனதில் முக்கியத்துவம் பெற்றுள்ளதை பறைசாற்றும் நுால். சித்தர்கள், அவதார மூர்த்திகள் எல்லாரும் மாண்டு போயினர். சாக மாட்டேன் என சபதம் செய்தவனும் செத்துப் போனான். அச்சத்தையும், சினத்தையும் வென்றவருக்கு சாவு இல்லை என சொன்ன பாரதி இன்றும் வாழ்கிறார் என்பதை அழகாக பதிவு செய்துள்ளது.
பிறப்பும், இறப்பும் இயற்கையின் நிகழ்வு. அதை மாற்ற இயலாது. வந்தவர்கள் எல்லாம் போய்த் தான் ஆக வேண்டும். அடம் பிடிக்கும் ஆற்றல் மனித உயிருக்கு இல்லை. ஆனால், புரட்சிக் கருத்துக்களை பேசிய பாரதி புகழ் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது என்பதை முன்னிறுத்துகிறது. பாரதியின் ஆளுமையை முழுமையாகப் பதிவு செய்துள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்