மகாபாரதம், ஞானகாண்டத்தில் இடம்பெற்றுள்ள, 700 சுலோகங்களே பகவத்கீதை. இதற்கு பாரதியார் எழுதிய உரையுடன் தொகுப்பாகியுள்ளது இந்த நுால்.
பகவத்கீதைக்கு மகாத்மா காந்தி, திலகர், அரவிந்தர், ராஜாஜி, ராகவையங்கார் என பலர் உரை எழுதியுள்ளனர். பாரதியாரும் சிறப்பான உரை எழுதியுள்ளார். அர்ஜுனன் பலவிதமான சந்தேகங்களை பகவான் கிருஷ்ணரிடம் கேட்டு, விளக்கம் பெறுவதாக உரையாடல் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதியாரின் உரையில் கவித்துவம் பொங்கி நிற்கிறது. பகவத் கீதையைப் படிக்கக் தொடங்குவோருக்கு அதன் நோக்கம், கருத்து, சாரம் ஆகியவற்றை முன்னுரையிலேயே தெளிவாகப்புலப்படுத்துகிறது. தமிழுக்கு கிடைத்துள்ள அரிய உரை நுால்.
– புலவர் சு.மதியழகன்