இந்திய அரசியல், அரசியல்வாதிகள் குறித்து பேசும், 21 கட்டுரைகளின் தொகுப்பு நுால். காந்திஜி முதல் தற்போது கட்சி துவங்கியவர்கள் வரை பட்டியலிடுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி காலத்தில் உலக தலைவர்களின் அணுகுமுறை பற்றி எல்லாம் விவரிக்கிறது. வழக்கமாக வெளியிடும் தேர்தல் அறிக்கை என்ன செய்து விட்டது என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது.
அறம் தவறி செய்த அரசியல் பிழையால் ஏற்பட்ட பாதிப்புகள், தலைவன் இல்லாமல் அணி இயங்கும், ஆனால், அணி இல்லாமல் தலைவனே இல்லை என்ற நுண் அரசியலை வெளிப்படுத்துகிறது.
சொல்லவந்த கருத்தாக்கத்தை உணர்த்த, 20 புத்தகங்களை ஆதாரமாக கொண்டு உள்ளது. சில கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. சமகால அரசியலை நுட்பப் பார்வையுடன் சொல்லும் நுால்.
– டி.எஸ்.ராயன்