பண்டைய மோகூர் மன்னன் பழையன் மாறன் காலத்தில் வீரத்துடன் விளங்கிய கோசர்கள் பற்றி விளக்கும் ஆய்வு நுால். ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.வெங்கடாசலம் பிள்ளை, ரா.ராகவையங்கார், கே.ஏ.நீலகண்டசாஸ்திரியார் போன்ற திறனாய்வாளர்கள் சுட்டிய சங்கப்பாடல்கள் மற்றும் வரலாற்று குறிப்புகளின் அடிப்படையில் மோகூர் மன்னன் பழையனுக்கும், கோசர்க்கும், மோரியருக்கும் இடையிலான தொடர்பு விளக்கப்பட்டுள்ளது.
கோசர்க்குத் துணையாக மோரியர் படை வந்து மேற்கொண்ட போரின் முடிவு தெரியவில்லை என்றும், பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் ஏவல் கேட்கும் வீரராய், அவைக்களத்தில் கோசர் விளங்கினர் என்றும் சங்கப் பாடல் சான்றுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது.
மோகூர் அமைந்திருந்த நிலப்பரப்பு விரிவாக விவாதிக்கப்படுவதோடு, மோரியர் படையெடுப்புகள், ஆட்சி விபரங்கள் ஆய்வு நோக்கில் தரப்பட்டுள்ளன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு