புது மாதிரியான பயண இலக்கிய நுால். குஜராத்தியில் எழுதப்பட்டது. அண்ணல் காந்திக்கு நெருக்கமான காகா காலேல்கர் படைத்தது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய நதிகள், கடல் பகுதிகளை விரிவாக எடுத்துரைக்கிறது. கடல், கடல் சார்ந்த பகுதி பற்றி பேசுகிறது. காவிரி ஆற்றின் நடுவில் உள்ள தீவில், திப்பு அரண்மனையும், கல்லறையும் இருப்பதாகவும், ரங்கநாதரை திப்பு வழிபட்ட செய்தியையும் எடுத்துரைக்கிறது.
பெல்காமில் பாயும் மார்க்கண்டி, ஆந்திரத்தில் கிருஷ்ணா, பீஹாரின் கண்டகி, குஜராத்தின் சாபர்மதி, ஆக்ராவின் யமுனா, ஜம்முவின் தவீ, கங்கை, சிந்து, ராவீ, நேபாளத்து பாக்மதி, கயையின் பல்கு, நர்மதை, காவிரி, வைகை என நதிகளை எழுதியுள்ளார்.
பஞ்சாபில் பாயும் ஜீலம், ஜீனாப், ராவீ, பியாஸ், சட்லஜ், உத்தர பிரதேசத்தில் பாயும் கங்கை, யமுனை, கோமதி, சரயு, சம்பலையும் குறிப்பிட்டுள்ளார். பழங்கால வாழ்வியலையும், வரலாற்றையும் தெரிவிக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்