உலகுக்கு ஞானத்தை கொண்டு வந்த பகவான் புத்தரின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நுால். வரலாற்று ஆதாரங்கள் மற்றும் புராணக்கதை மரபுகள் துணையுடன் எழுதப்பட்டுள்ளது. புத்தரின் வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ள அதிகமும் உதவுவது, புராணக் கதைகள் தான். மன்னராக பிறந்ததால் வாழ்க்கை தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பலவும் உள்ளன. உலகத்துக்கு ஒளியாக விளங்கிய அவரது வாழ்க்கை பற்றி பல்வேறு வகைப்பட்ட செய்திகள் உள்ளன. அவற்றை உள்வாங்கி பன்முக பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது.
வாழ்க்கை நிகழ்வுகளை முறைப்படுத்தி 20 அத்தியாயங்களில் தருகிறது. ‘புத்தரின் அவதாரம்’ என துவங்குகிறது. புத்தர் பிறப்பு பற்றி கூறப்படும் ஆதாரங்கள் அடிப்படையில் அலசி தரப்பட்டுள்ளது. அவரது இளமைப் பருவம் துவங்கி, படிப்படியாக அடைந்த வளர்ச்சி பரிணாமத்தை கால வரிசைப்படி சொல்கிறது. அரிய செய்திகள் பல உள்ளன. மகா பரி நிருவாணம் என்பதுடன் நிறைகிறது. அறிவு ஒளியால் உலகை மிளிர செய்தவரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நுால்.
– பாவெல்