பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிவபரமே, பழந்தமிழர் சமயம் என வரையறுக்கிறது. குறிஞ்சி நிலத்து முருகன் முதலாய தெய்வ வகைக்கு தோற்றம், கடவுளாகிய முதற்பொருளுக்கு தோற்றமும் முடிவும் பற்றி கூறப்படுவதில்லை. சங்க இலக்கியங்கள், ‘பிறை முடியும் முக்கண்ணும் கறை மிடறும்’ உடையவனாகக் குறிக்கும் சிவபரம் பொருளே, ‘பழந்தமிழர் சமயம்’ என வரையறுக்கின்றன.
வடமொழி ஆகமங்களும், தமிழ்ச் சமய இலக்கியங்களும் எக்காலத்தும், எவ்விடத்தும் வடமொழியில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற விதியை வகுத்ததே கிடையாது என பதிவு செய்துள்ளது.
சங்ககால சோழன் செங்கணான் முதல், இடைக்கால சோழர் பலரும் திருவானைக்காவுடைய பெருமானுக்கு, அரிய திருப்பணி புரிந்த செய்தியும் இடம் பெற்றுள்ளது. சைவ சித்தாந்தம் பற்றி புரிதலை ஏற்படுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்