மனிதநேயம் மிக்க வடலி விளை செம்புலிங்கத்தின் பெருமைகளைக் கூறும் நுால். தென்மாவட்ட திருவிழாக் காலங்களில், கிராமங்களில் இரவு நேரத்தில் கூறப்படும் கதைகளில் முக்கியமானதாகவும் உள்ளது. அதிலிருந்து இந்த கதையின் பெருமை புலப்படுகிறது.
பெரும் வீரனாக திகழ்ந்த செம்புலிங்கம் குறித்த தகவல்களை அரிதின் முயன்று நுாலாக்கம் செய்யப்பட்டுள்ளது. பழமொழிகள், வட்டார வழக்கு போன்றவற்றை இடத்திற்கு ஏற்ப புத்தகத்தில் திறம்பட கையாண்டுள்ளது சிறப்பு.
ஏழை, எளிய மக்களின் துயர் தெரிந்து, துன்பத்தை போக்கிய செம்புலிங்கம் உரிய இடங்களில் கொள்ளையடித்து, ஏழைகளுக்கு உதவியதாக பதிவிட்டுள்ளார் ஆசிரியர். ‘வாராரு வாராரு செம்புலிங்க நாடாரு...’ எனத் துவங்கும் நாட்டுப்புறப் பாடல், ஊர்கள் தோறும் பாடப்படும் பின்னணியை விளக்கியுள்ளார். செம்புலிங்கத்தின் இளமைப் பருவ வாழ்க்கையை, கண்முன் நடப்பது போல பதிவு செய்துள்ளார். வடலிவிளை செம்புலிங்கத்தின் பெருமைகளைக் கூறுவதாக அமைந்த நுால்.
– முகில் குமரன்