கண்ணகியை மணந்த கோவலன், ஏன் மாதவியை நாடினான் என்ற கேள்விகளுடன் சிலப்பதிகாரத்தை ஆய்வு செய்துள்ள நுால். சலுகைகள் வழங்குவது மற்றவர்களைப் புறக்கணிப்பதாக பொருள் கொள்ள முடியாது என மாதவி, கண்ணகியை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.
கோவலன் பெரும் வணிகர்கள் குலத்தை சேர்ந்தவன். கடல் வாணிபத்தில் கொடிகட்டிப் பறந்த குடும்பம். அவர்கள் மரக்கலம் நடுக்கடலில் உடைந்து விடுகிறது. இறைவனை வேண்டியதால் மணிமேகலை தெய்வம் அடைக்கலம் கொடுத்தது. அதுவே அவர்கள் குல தெய்வமாக ஆயிற்று.
குலதெய்வ பெயரை, மகளுக்கு சூட்டினான் கோவலன். புணர்ச்சி இன்பம் இல்லற வாழ்வின் இனிய இன்றியமையாத பகுதி. அதை கண்ணகியிடம் பெற இயலாமல் மாதவி பக்கம் தடம் மாறினான் என நிலை நிறுத்துகிறது இந்த நுால்.
– சீத்தலைச் சாத்தன்