நாட்டுப்புற வட்டார வழக்கு சொற்களுக்கென்று உருவாக்கப்பட்ட விரிவான அகராதி நுால். குமரி, நெல்லை, செட்டிநாடு, தஞ்சை, கொங்கு, மதுரை, ராமநாதபுரம், நீலகிரி போன்ற பகுதி வட்டாரங்களின் நாட்டுப்புறக் கலைச்சொற்கள், படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துவக்கத்தில் தமிழில் திவாகர நிகண்டும், பிங்கல நிகண்டும் சொற்களுக்கு பொருள் கூறும் கருவி நுால்களாக வந்ததை குறிப்பிட்டு, அகராதி வெளியீடுகளை பற்றிய விபரங்கள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.
ஆய்வாளர்களின் பார்வையில் வட்டாரம், வழக்கு சொல் போன்றவற்றிற்கான விளக்கங்களோடு, திரிந்து வந்த வழக்கு சொற்களின் உச்சரிப்பு மாற்றங்கள் மற்றும் சொல்லகராதிகள் பற்றிய கருத்துக்கள் பெரிதும் பயனுள்ளவை. பல்வேறு இடம் மற்றும் இனங்களுக்கான வட்டார வழக்கு சொல்லகராதிகளின் விபரங்களை தெளிவுபடுத்தும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு