முதலும் முடிவும் இல்லாத பரம்பொருளான கடவுள், குருவிடம் வைக்கும் அன்பு மற்றும் பக்தியை வலியுறுத்தும் நுால்.
பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த, 108 திவ்ய தேசங்களுக்கான அறுசீர் ஆசிரிய விருத்தம், நுாற்றெட்டுத் திருப்பதிகள் அமைந்த சோழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, நடு நாடு, தொண்டை நாடு, வட நாடு, திரு நாடு குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளது.
ஆழ்ந்த புலமை உள்ளவர்களுக்கு, திருப்பதி தொடர்பான நுட்பமான எட்டு செய்திகளைக் கொண்டுள்ளது. செய்யுள் முதற்குறிப்பகராதி, புஷ்கரணிகள், விமான பெயர்கள், நாச்சியார் பெயர், இறைவன் திருநாமங்கள், நுாற்றெட்டுத் திருப்பதிகளின் பெயர் என, அகர வரிசையில் இடம் பெற்றுள்ளது. பக்தி இலக்கிய ஆய்வுக்கு ஏற்ற நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்