வணிகம் மற்றும் பட்டயக் கணக்கு தொடர்பான பாடங்களுக்கு எளிமையாக விளக்கம் தரும் நுால். மாணவர்களுக்கு புரியும் விதமாக, தனித்துவமான ஆங்கில சொற்களுக்கு, தமிழில் பொருள் தரப்பட்டுள்ளது. கேள்வி – பதில் பாணியில் போதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம், ஆறு தலைப்புகளில் தகவல்களைக் கொண்டுள்ளது. முதல் பாடம், வணிகம் தொடர்பான தகவல்களை அறிமுகம் செய்கிறது. அடுத்து, வியாபார சூழல் பற்றிய விபரங்களைப் பேசுகிறது. தொடர்ந்து, வியாபார நிறுவனங்கள், செயல்பாடுகள், அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் வணிகங்களின் வளர்ச்சி போன்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தலைப்பின் கீழ் அவற்றை தெளிவுபடுத்தம் செய்திகளும், தேர்வுக்கு ஏற்ற வகையில் எளிய கேள்வி – பதில் பாணியில் தரப்பட்டுள்ளன. பட்டயக் கணக்கர் என்ற சி.ஏ., தகுதித் தேர்வு எழுத தயாராவோருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டயக் கணக்குதுறையின் அடிப்படையை தெளிவாக தரும் நுால்.
– மலர்