பக்கீம் சந்திர சாட்டர்ஜி புனைந்த, ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாற்று பின்னணியை எடுத்து கூறும் நுால். மிக எளிய நடையில் தகவல்களை தருகிறது. பாசறை கீதம், பாரதியாரின் தொண்டு, வந்தே மாதரம் பிள்ளை, சட்டமன்றத்தில் வந்தே மாதரம், எதிர்ப்பும் போட்டியும், அரசியல் நிர்ணய மன்றத்தில் முடிவு ஆகிய தலைப்புகளில் செய்திகளை தொகுத்து தருகிறது.
வந்தே மாதரம் பாடல் உருவான போது பல்வேறு சூழல்களிலும் எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் தகர்த்து எழுந்து நிற்பதை அழகாக சுட்டுகிறது. தேச பக்தியின் வரலாற்றை கூறும் நுால்.
– மலர்