நாட்டில் நடக்கும் தீமைகளைக் கண்டு புதுக்கவிதைகள் மூலம் பொங்கும் நுால்.
கவிதைகளில் ஒன்று, ‘முதுகெலும்பை முறித்து கொண்டவன் நிமிர்வது எப்போது... முதுகெலும்பே இல்லாதவன் நிமிர்வதை நினைக்க முடியாது...’ என உணர்வை வெளிப்படுத்துகிறது.
மற்றொரு கவிதையில், ‘அணை கட்டலாமா கேள்வியுடன் அனுப்பினாள் காரியதரிசி... பதில் குறிப்பு வந்தது அமைச்சரிடம் இருந்து... அணைக்கலாம் எங்கே வைத்து...’ என்பது போன்ற வார்த்தை விளையாட்டுகள் உள்ளன.
மகாத்மா காந்திக்கு, ‘வன்முறை இல்லாமல் சட்டசபைகளை நடத்த முடியாத போது, உன்னால் மட்டும் வன்முறையின்றி சுதந்திரம் எப்படி வாங்க முடிந்தது...’ என கேள்வியாக ஒரு கவிதை படைத்துள்ளார். இது போல் படைப்புகள் அமைந்த நுால்.
– சீத்தலைச் சாத்தன்