திகில் கதையின் துவக்கம்போல், நள்ளிரவில் துவங்குகிறது இந்த நுால். ஜன்னல் வழியாக வந்த கரிய உருவத்தைப் பார்த்து மலைப்பாம்பு என்று அஞ்சும் கிராமத்தைச் சேர்ந்த இருவர், அது யானையின் துதிக்கை என அறிந்து வெளியே நழுவி, சத்தம் போட்டால் அங்கே மேலும் இரண்டு யானைகள் என்று துவங்குகிறது. மலைக் கிராமங்களை யானை படுத்தும் பாடு விவரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோவை மாவட்டத்தில் மதுக்கரை, வாளையாறு, மொட்டைப்பாறை, குரும்பப் பாளையம், கோவைக் குற்றாலம் என்று பல ஊர்களுக்கு அழைத்துச் செல்கிறது.
நிகழ்வுகளுடன் தொடர்புடைய படங்களைப் பக்கத்துக்குப் பக்கம் வழங்கியிருப்பது, தகவல்களின் துல்லியத் தன்மையைக் கூட்டுகிறது. கதை படிப்பது போல் ஆர்வத்தைத் துாண்டும் மொழிநடையில் அமைந்த நுால்.
– முகிலை ராசபாண்டியன்