இந்தியாவில் பத்திரிகையின் வரவு, வளர்ச்சி என எடுத்துரைக்கும் நுால். நேர்காணல், அதற்கான முன் தயாரிப்பு, அறிக்கை, மேடை பேச்சு, ஆவணங்களை செய்தியாக்கும் வழிமுறைகளை சொல்கிறது. செய்தி, வர்த்தகம், வளர்ச்சி, இயந்திரம், தரவு, நிர்வாகம் போன்ற துறைகள், பத்திரிகையுடன் கைகோர்த்து செல்வதை விவரிக்கிறது.
குற்ற செய்தி சேகரிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள், புலனாய்வு, குற்றத்தின் தன்மை, இரு தரப்பு வாதம் போன்றவற்றை உண்மை தன்மையுடன் செய்தியாக்க வேண்டும் என்கிறது. பத்திரிகையாளர்களின் சமூக பொறுப்பு குறித்து அலசுகிறது.
– டி.எஸ்.ராயன்