பஜகோவிந்தம் பற்றிய ஆன்மிக விளக்க உரைகளின் தொகுப்பு நுால். ஆதிசங்கரர் மற்றும் அவரது சீடர்கள் பாடிய சமஸ்கிருத சுலோகங்களுக்கு, தெளிவான விளக்கமாக அமைந்து உள்ளது. அத்வைத தத்துவ சாரத்தை விளக்கும் தொகுப்பு பஜகோவிந்தம். மரணத்தின் வாசலில் நிற்பவர், அந்த நேரத்தில் எதை நினைக்க வேண்டும், எதை மனப்பாடம் செய்ய வேண்டும் என உபதேசிக்கும் வகையில் பாடப்பட்டது.
இதில், ஆதிசங்கரர் பாடியவை, ‘த்வாதச மஞ்ஜரிகா ஸ்தோத்திரம்’ எனவும், அவரது சீடர்கள் பாடியவை, ‘சர்ப்பட பஞ்ஜரிகா ஸ்தோத்திரம்’ என்றும் வழங்கப்படுகின்றன. இதில் உள்ள தத்துவக் கருத்துக்கள், மனிதனுக்கு ஏற்படும் அறிவுக் குழப்பத்தை சீராக்கி, ஞானம், பக்தி, கர்மத்தை மேம்படுத்துவது பற்றி விளக்குகிறது.
இசையுடன் பாடும் வகையிலான சுலோகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும் சீரான தெளிவைத் தரும். இறை வழிபாட்டில் மன ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் நுால்.
–
ராம்