சிங்கப்பூர், இலங்கை, மலேஷியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளில் அமைந்துள்ள 30 கோவில்களைத் தேர்ந்தெடுத்து தல வரலாறு, கோவிலின் சிறப்புகள், தொன்மைச் சிறப்புகள், தல விருட்சம், தீர்த்தம், விழாக்கள், நிர்வாகம், அமைவிடம், தரிசன நேரம் போன்றனவற்றை விரிவாக தரும் நுால். தொன்மை வாய்ந்த இலங்கை திருகோணமலை திருக்கோணேஸ்வரம், கேது பகவானால் வழிபட்ட கேத்தீச்சரம் மற்றும் கதிர்காமம் கந்தன் திருக்கோவில்களின் சிறப்புகள் சுட்டப்பட்டுள்ளன. இலங்கை வேந்தன் கஜபாகு, திருக்கோணேஸ்வரர் கோவிலை இடித்து பவுத்த கோவில் கட்ட முற்பட்டபோது பார்வை இழந்த நிகழ்வும், இறையருளால் மீண்டும் பார்வை பெற்ற நிகழ்வும் விளக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் ராமேஸ்வரம் என அழைக்கப்படும் நகுலேஸ்வரம், நல்லுார் கந்தசுவாமி திருக்கோவில் பற்றியும், முன்னேஸ்வரர் கோவிலிலுள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கோவில்களைத் தரிசிக்கும் உணர்வை ஏற்படுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்