துணிச்சலாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் வெவ்வேறு துறை சார்ந்தவை. ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழ் வெளியான தேதியை குறிப்பிட்டு இருப்பது, எழுதப்பட்ட காலகட்டத்தின் நிலையை தெளிவாக புரிய வைக்கிறது.
அமெரிக்காவிலிருந்து அடிப்படை உரிமை, கனடாவிலிருந்து கூட்டாட்சித் தத்துவம், ரஷ்யாவிலிருந்து அதிகாரப் பகிர்வு என உருவான காலகட்டத்தில் தேடிப்பிடித்து இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.
சாசனத்தின் முதல் வரியில், ‘யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்’ என்று வருவதை ஒன்றியம் என்று மொழிபெயர்க்கலாமா என கேட்டு, பேரரசு என்றால், 140 கோடி பேருக்கும் மகிழ்ச்சி தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தோற்றுப்போகும். நியாயங்கள் மட்டுமே வெல்லும் என்று குறிப்பிடுகிறார். இட ஒதுக்கீடுகளால் மட்டுமே மக்களை முழுமையாக மேடேற்ற முடியாது என்கிறார். தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை என மேலும் மூன்று தலைநகரங்கள் வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. சுடச்சுட உள்ள கருத்துக்கள், நாட்டு நடப்பை புரிந்து கொள்ள உதவும்.
– சீத்தலைச் சாத்தன்