சட்ட அறிஞர், அரசியலறிஞர், பத்திரிகையாளர், கவிஞர் எனப் பன்முக சிறப்புகளை பெற்ற எர்ட்லி நார்ட்டன் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களைத் தொகுத்துள்ள நுால். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு கல்லுாரி கால நிகழ்வுகள், அச்சு ஊடகச் செயல்பாடுகள், நீதிமன்றப் பணிகள், மெட்ராஸ் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆணையராகப் பணியாற்றியது, தேசிய காங்கிரஸ் ஈடுபாடு, மகாத்மா காந்தி மீது நார்ட்டன் வெளிப்படுத்திய விமர்சனப் பார்வை என விரிவாக உள்ளது.
வங்கதேசப் பிரிப்பு, சுதேசி இயக்கம், தன்னாட்சி உரிமை, ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரவுலத் சட்டம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற நிகழ்வுகள் மீது, கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய விடுதலைக்கு முன்பான காலத்தில், மிதவாத அரசியலில் முன்மாதியாக திகழ்ந்ததும் சான்றுகளோடு முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தை அறிய உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு