இயற்கை, சமூக அக்கறை, விவசாயிகளின் நிலை குறித்த கவலை என பல தரப்பட்ட எண்ணங்களின் குவியலாக வெளிப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். எளிமையாக வாசிக்க உகந்ததாக எழுதப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில், 63 புதுக்கவிதைகள் உள்ளன. முதல் கவிதை, ‘அம்மா’ என்ற தலைப்பில் துவங்குகிறது. அது சமையல் அறையை உயிரூட்டம் பெற வைக்கிறது. இறுதியில், ‘காத்திருப்பு’ என்ற தலைப்புடன் நிறைவு பெறுகிறது. துறவியின் மனநிலையை அது காட்டுகிறது. எண்ணங்கள் மீது வண்ணங்களை பூசியுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்