சுத்த கணித பஞ்சாங்கத்தின் தொகுப்பாக அமைந்த நுால். ஜோதிட சாஸ்திரம் தெரியாதவர்கள் கூட எளிதில் அறிந்து கொள்ளும்படி எளிய பதங்களை தந்து புரிய வைக்கிறது. திருகணிதத்தின் அவசியம் குறித்தும், நாழிகை, வினாடி, மணி அட்டவணை குறித்தும், 27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.
அமாவாசை, பவுர்ணமி, அக்னி நட்சத்திரம் குறித்த விளக்கம், குழந்தைப் பிறப்பில் ஏற்படும் தோஷங்கள் பற்றியும் தெளிவான விளக்கம் உள்ளது. கிரஹண, ருது தோஷங்கள், திருமணப் பொருத்தம், சுப முகூர்த்த நிர்ணய விபரங்கள், பலன்கள், வாஸ்து, நவக்கிரக சாந்தி போன்றவை முதல் பாகத்தில் விளக்கப்பட்டு உள்ளன.
கிராந்திகள், நட்சத்திர ஹோராமணி, அக் ஷ ரேகை, தீர்க்க ரேகை நேர வித்தியாசம், ஜாதகம் கணிக்கும் முறை போன்ற விபரங்கள் இரண்டாம் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளன. தாரண வருஷம் முதல், மன்மத வருஷம் வரை சுத்த திருகணித பஞ்சாங்கம் மூன்றாம் பாகத்தில் விபரமாக உள்ளது. ஜோதிடம் கற்க விரும்புவோருக்கு உதவும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து