வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி வதம் என்னும் பகுதியை ஆய்வு செய்து, கருத்தை தொகுத்து கூறும் ஆங்கில நுால். ஆறு அத்தியாயங்களில், 48 கட்டுரைகளை உள்ளடக்கி உள்ளது.
வாலி வதம் என்ற பகுதியில் வழக்கறிஞர் என்ற நிலையில் இருந்து கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன. கம்பராமாயணத்தில் புலமை பெற்றவர்கள், வாலி வதம் பற்றி கூறிய கருத்துக்களை பதிவு செய்து, ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசுகிறது.
ராமன் நீதி நெறியைக் கடைப்பிடித்து, வாலியை வதம் செய்தது சரியா, சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து சென்றதால் நீதியை நிலை நிறுத்த வதம் செய்தது சரியா என்ற ஆழ்ந்த விவாதம் வாயிலாக நியாய தர்மங்களை எடுத்துக் காட்டி விளக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் பார்வையில் நின்று ராமாயணத்தை ஆய்வு செய்த அறிஞர்கள் கருத்து பதியப்பட்டுள்ளது. புரிந்து கொள்ளும் விதமாக எளிய ஆங்கில நடையில் அமைந்துள்ளது. வாலி வதம் பற்றி அறிந்து கொள்ளவும், ஆய்வு செய்யவும் உதவும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்