ஹிந்து மத புனித நுாலான பகவத் கீதையை, சாமானியருக்கும் புரிய வைக்கும் வகையில் ஆங்கிலத்தில் மூதறிஞர் ராஜாஜி எழுதிய நுால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆன்மா, கர்மா, இறைவன், இயற்கை குறித்து முதல் பகுதியிலும், மனக் கட்டுப்பாட்டு நடைமுறை, தியானம், அன்றாட வாழ்வு நெறிமுறைகள் இரண்டாம் பகுதியிலும் சொல்லப்பட்டுள்ளன.
ஜீவித ஒருமை, அத்வைதம் மற்றும் கீதா உபதேசம் குறித்து மூன்றாம் பகுதியிலும், கடவுள் மறுப்பு, சரணாகதியும் அருளும், எல்லாருக்கும் நம்பிக்கை என்ற தலைப்புகள் நான்காம் பகுதியிலும் விளக்கப்பட்டுள்ளன. பகவத் கீதையின் ஸ்லோகங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளது.
‘இந்த உலகம் முழுதும், புலன்களுக்கு எட்டாத என்னால் பரவியுள்ளது. எல்லா ஜீவன்களும் என்னில் அடக்கம். நான் அவற்றிலிருந்து அப்பாற்பட்டு நிற்கிறேன்’ என்பது போன்ற விளக்கங்கள் அருமை. ஆன்மிக அன்பர்களுக்கு ஏற்ற நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து