புகழ் பெற்ற பாகவதரை, தமிழ் இசை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவன் சந்திக்கும் போது ஏற்படும் பிரச்னையை மையமாக கொண்ட நாவல். சந்தேகக் கணவனை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்படும் பாகவதரின் மூத்த மகளுக்கு, பலதரப்பட்ட பெண்களின் அறிமுகம் கிடைக்கிறது. இப்படி பல்வேறு கதை மாந்தர்களின் மனப் போராட்டங்களை விறுவிறுப்பாக விவரிக்கிறது.
தமிழிசையின் முன்னோடிகள் குறித்தும், 16 அடிப்படை ராகங்கள் குறித்தும், அவை கையாளப்படும் நேர்த்தி குறித்தும், முற்போக்காய் செயல்பட்ட இசை விற்பன்னர்கள் குறித்தும் விளக்குவது வாசகர்களுக்கு புது தகவல்.
மகளிர் சிறையில் நடக்கும் அத்துமீறல்கள், பழிவாங்கல், கைதிகளின் மனோநிலை, அவர்களின் பின்புலம் குறித்த தகவல்கள் நாவலில் பரபரப்பு அத்தியாயங்களாக உள்ளன. இசை, காதல், நகைச்சுவை, வன்மம், சீர்திருத்தம், திருப்பம் என வணிகநோக்குத் திரைப்படத்தை பார்ப்பது போல் உணர வைக்கும் நாவல்.
– பெருந்துறையான்