திருமணத்திற்குப் பின் வாழ்க்கையை வளமாக்குவதை வலியுறுத்தும் நுால். கலாசார வீழ்ச்சிக்கு, பொருத்தம் பார்த்து திருமணம் செய்யாததும் ஒரு காரணம் என்று கூறுகிறது. மொத்தம், 1,296 கிரக அமைப்புகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகிறது; இதில், 432 அமைப்பு திருமணத்திற்குப் பின், வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்று உணர்த்துகிறது.
திருமணத்திற்கு உதவும் இரண்டு கிரகங்களில் ஒன்று, களத்திரகாரகன் என்ற சுக்கிரன் என சுட்டுகிறது. கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. ராசிப் பொருத்தம், தினப் பொருத்தம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. திருமணப் பொருத்தம் பார்ப்போருக்கு உதவும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து