இலங்கை வட்டார தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையும், வெவ்வேறு களத்தையும், பொருளையும் உள்ளடக்கி உள்ளன. அனைத்தும் மனிதநேயத்தை மையமாக கொண்டுள்ளன. ராணுவ ஹெலிகாப்டர் சப்தம் கேட்காத நாளொன்றில், வயல் வரப்பில் கண் அயரும் இளம் ஜோடிக்கு நேரும் கொடூரத்தை, ‘யாழ் இனிது யார் சொன்னது’ என்ற சிறுகதை விவரிக்கிறது.
பணக்காரக் குடும்பத்தின் மருமகனாகும் தொழிற்சங்கவாதியின் மனப் போராட்டத்தை, ‘சங்கம் சரணம் கச்சாமி’ கதையில் விவரித்திருக்கும் விதம் அற்புதம். ‘ஏப்ரல் இருவத்தொண்டு’ கதை, ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து சொல்கிறது. என்பது குறித்து பேசுகிறது. வட்டார வழக்கு உரையாடல்களை கொண்டுள்ள இந்த நுால் சுவாரசிய அனுபவம் தரும்.
– மேதகன்