வணிக ரீதியாக பயன்படும் 200 மூலிகைகள் உற்பத்தி முறை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். தாவரங்களை கண்டறிய வசதியாக வண்ணப்படங்களும் தரப்பட்டுள்ளன. சில மூலிகைகள் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே வளரும். ஆண்டு முழுதும் அவற்றுக்கு தேவை இருக்கும். அந்த மூலிகை பயிரிடுவது, குறிப்பிட்ட காலத்தில் அறுவடை, சேமித்து பயன்படுத்துவது போன்ற தகவல்களை கொண்டுள்ளது.
தாவரங்களை வகை பிரித்து, அவற்றின் பயன்பாட்டை தெரிவிக்கிறது. மருத்துவ ரீதியாக உள்ள முக்கியத்துவம் குறித்தும் தகவல்களை கொண்டுள்ளது. மூலிகை செடி, கொடிகளுடன், தாவரங்கள் பற்றியும் விரிவாக தருகிறது. அவற்றை பயன்படுத்தும் முறை பற்றியும் குறிப்பிடுகிறது. வணிக ரீதியாக மருத்துவ தாவரங்களை உற்பத்தி செய்ய விரும்புவோருக்கு உதவும் நுால்.
– மதி