திரைப்படப் பாடல் எழுந்த சூழலை விவரிக்கும் நுால். கவிஞர்கள் அனுபவங்களை பாடல்களில் பதிவு செய்துள்ளதை தெரிந்து கொள்ள உதவும். கல்யாணப் பரிசு திரைப்படத்தில், ‘அக்காவுக்கு வளைகாப்பு’ என்ற பாடலுக்குப் பட்டுக்கோட்டை மனைவி அடியெடுத்துக் கொடுத்தது, பொதுவுடைமைக் கருத்துகளை எளிமையாக பதிவு செய்தமை போன்ற தகவல்கள் உள்ளன.
கண்ணதாசன் அனுபவங்களை சோதனை பாடல்களில் பொருத்திக் காட்டியமை, படங்கள் தோல்வியுற்றாலும் பாடல்களால் தலைநிமிர்ந்தது, கதைக்கு ஏற்ற சூழலை அறிந்து பாட்டு எழுதியது போன்றவற்றை புரிய வைக்கிறது.
கவிஞர் வாலி, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்று எழுதி, எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான சூழல் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளது. மூன்று பாடலாசிரியர்களின் திரைப்பட வாழ்க்கையை அறிந்து கொள்ள பயன்படும் நுால்.
– ராம.குருநாதன்