இரண்டு பகுதிகளாக பிரித்து படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். முதல் பகுதி பொது கவிதைகள் என்றாலும் சமூகத் தாக்கம் இருக்கிறது. இரண்டாவது பகுதியில் மேரி கியூரி, லுாயி பாஸ்டர், ஸ்டீபன் ஹாக்கிங், பெஞ்சமின் பிராங்கிளின் என்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும், குடும்ப வாழ்க்கையும் கவிதை வடிவில் படைக்கப்பட்டுள்ளது.
இரும்பில், நீரும் காற்றும் சேர்வதால் துரு உருவாகிறது. இதயம் என்பது இயக்க உறுப்பு. அது தெரிந்தது தான். ஆனால், அதன் அமைப்பு இரண்டு அடுக்குகளும், நான்கு அறைகளும் கொண்டது என்று சுட்டிக் காட்டுகிறது. அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உதவும் புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்