கம்யூனிஸ்டுகள் நடத்திய ஏழாவது உலக காங்கிரசில் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஆற்றிய தொடக்கவுரை, நிறைவுரை, தீர்மானங்களை தொகுத்து வழங்கும் நுால். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பாசிசம், பூர்ஷ்வா என்னும் சொற்களுடன் கம்யூனிசமும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
முதலாளி வர்க்கத்திற்கு ஏற்படும் ஆரம்ப காலத் தோல்வியின் போது, தொழிலாளர்கள் மேலும் மேலும் நசுக்கப்படுவர். ஆனால் தொடரும் போராட்டமும், தொழிலாளர் ஒற்றுமையும் வெற்றியைப் பெற்றுத் தரும் என விளக்கப்படுகிறது.
முதலாளி வர்க்கத்தை எதிர்ப்பதற்காக, ஒரே சிந்தனையில் உள்ளவர்களை ஒன்று திரட்டி ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும் என்பதை இந்த உரைகள் தெளிவுபடுத்துகின்றன. அரசியல் ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய நுால்.
– முகிலை ராசபாண்டியன்