கவியரங்குகளில் பங்கேற்று பாடிய கவிதைளையும்ம், பத்திரிகைகளில் எழுதியவற்றையும் தொகுத்து அமைக்கப்பட்டுள்ள நுால். தமிழ் மொழியை வாழ்த்தி பாடிய வெண்பாக்கள், கவிஞரின் மரபுக்கவிதை புலமைக்கு கட்டியம் கூறுகின்றன. வள்ளுவர், சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், பாரதியாரை போற்றிப் பாடிய பாடல்கள் அணி சேர்க்கின்றன.
அரசியலைத் தொட்டுச் செல்லும் கவிஞர், மூவருலா பாடல் பாட விழைந்து, அரசியல்வாதி, இலக்கியவாதி, சமூகத் தொண்டர் ஆகிய மூவரும் உலாப் பாடல் பெற எந்த தகுதியும் அற்றவர்கள் எனக் கூறும் இடத்தில் சினம் வெளிப்படுகிறது.
கல்பனா சாவ்லா, அன்னை தெரசாவைப் பாடிய கவிஞர், சம கால சான்றோருக்கு வாழ்த்துப் பாவும், மறைந்த அறிஞருக்கு இரங்கற் பாவும் பாடியுள்ளார். இலக்கிய காதல் பற்றியும், மறைந்தும் மறையாத புகழ் மாமனிதர்கள் பற்றியும் எழுதிய கவிதைகள் சிறப்பு சேர்க்கின்றன.
– புலவர் சு.மதியழகன்