மருந்தில்லா மருத்துவத்திற்கான விளக்கம் தந்து மனநோய்க்கான அடிப்படைக் காரணங்கள், மனநோய் மருத்துவம், மருத்துவரின் தகுதி, மருத்துவ முறைகள், மனநோயாளிக்கு வேண்டிய முறையான ஆலோசனைகள், அரவணைப்புகள், கவனிப்புகளை விளக்கும் நுால்.
மனித மூளை நியூரான்களில் ஏற்படும் மின் கடத்தல் செயல்பாட்டை விரிவாக விளக்குவது சிறப்பு. தொன்றுதொட்டு வரும் ஆய்வுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான கருத்துகளுடன் மூளைக்கும், மனத்துக்குமான வேறுபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மனவியல், உடலியல், சமூகவியல் எனும் மூன்று பிரிவுகளுக்குள் மனநோய்களுக்கான அடிப்படைக் காரணங்களை பகுத்துக் காட்டி, மனநோயாளிகளுக்கு மனநோய் மருத்துவர் மட்டுமே சிகிச்சை தர வேண்டுமென்பது வலியுறுத்தப்படுகிறது. மனநோயை வருமுன் அறிந்து மருத்துவம் செய்ய உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு