மகாபாரதத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது போல் படைக்கப்பட்டுள்ள நுால். செய்யுள் வடிவில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில், துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் துவங்கி, ஹஸ்தினாபுரம், துரியோதனன் சபை, சகுனியின் சதி, சூதாட்டச் சுருக்கம், தருமன் நாட்டை வைத்தாடுதல் என, பல தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது.
இரண்டாம் பாகத்தில், அடிமை சருக்கத்தில் சூது மீட்டுத் துவங்குதல், சகாதேவன், பார்த்தன், வீமனை இழந்து தன்னை பணயம் வைத்திழத்தல், திரவுபதியை சபைக்கு அழைத்தல் எனத் துவங்கி, சபதச் சருக்கத்தில் முடிவடைகிறது. திரவுபதி நீதி கேட்பது, கண்ணனுக்காக செய்யும் பிரார்த்தனை, பாண்டவர்களின் சபதம் மற்றும் பாஞ்சாலி சபதம் என நிறைவடைகிறது.
மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ள நுால்.
– வி.விஷ்வா